தற்போதைய செய்திகள்

கடல் கடந்த காதல்..! பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த தமிழக இளைஞர் |

தந்தி டிவி

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் மாற்றுத் திறனாளி கலையரசன்... இவர் 2020ல் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அவர் தங்கி இருந்த இடத்திற்கு அருகில் வசித்த பிலிப்பைன்சைச் சேர்ந்த ஈவ்லின் கோபோலுடன் காதல் மலர்ந்த நிலையில், கலையரசன் வேலை மாற்றத்தால் 2021ல் சென்னை திரும்ப வேண்டிய சூழல் உருவானது. ஆனால் அதன்பிறகும் அவர்களின் காதல் செல்போன் மூலம் தொடர்ந்தது. இருவரின் காதலுக்கும் வீட்டில் பச்சைக் கொடி காட்டப்பட்ட நிலையில், தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள ஈவ்லின் விரும்பினார். இதையடுத்து ஆவடி திருமுல்லை வாயிலில் இந்த ஜோடியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது... பாரம்பரிய சேலை அணிந்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார் ஈவ்லின். அவரது பெற்றோர் பிலிப்பைன்சில் இருந்து வர முடியாமல் போன நிலையில், அவர்களுக்கு இணையதளம் மூலம் திருமண நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. உறவினர்கள் உடன் இல்லாத குறையை மணமகளுக்கு மணமகன் வீட்டார் தீர்த்து வைத்தனர்... ஈவ்லினின் பெற்றோர் மகளுக்கும் மருமகனுக்கும் ஆனந்தக் கண்ணீருடன் வாழ்த்து தெரிவித்தனர். தேசம் கடந்து மலர்ந்த காதல் திருமணத்தில் கைகூடிய மகிழ்ச்சியில் மணமக்கள் திளைத்தனர்...

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்