குவைத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், அவசர அவசரமாக குவைத்தில் தரையிறக்கப்பட்டது. குவைத்தில் இருந்து 158 பயணிகளுடன் புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானத்தில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரவு 11:05 மணிக்கு பதில், நள்ளிரவு 11:51 மணிக்கு புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது மீண்டும் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, குவைத்திற்கே திரும்பி சென்று, அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. தாமதமாக விமானம் வரும் என அறிவிக்கப்பட்டதால், சென்னையில் பயணிகளை வரவேற்க காத்திருந்தவர்கள், விமான நிலையத்தில் தவித்தனர்.