சென்னையில் உணவு ஆர்டர் செய்த போது, கெட்டுப் போன உணவினை டெலிவிரி செய்ததாக பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளார். ஆவடியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் ஆர்டர் செய்த உணவு கெட்டுப்போனதாக கூறி பெண் ஒருவர், உணவு பாதுகாப்பு துறையில் புகார் அளித்தார். இது தொடர்பாக அந்த பெண் வெளியிட்ட வீடியோவும் சமூக வலை தளங்களில் வைரலானது