தற்போதைய செய்திகள்

போன் காலில் வந்த மிரட்டல் - மும்பையில் 144 தடை உத்தரவு அமல்

தந்தி டிவி

மும்பையில் நவம்பர் 1 முதல் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மும்பை முழுவதும் பல முக்கிய இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மர்மநபர் ஒருவர் தொலைபேசி அழைப்பு மூலம் தெரிவித்து இருந்தார். இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து நவம்பர் 1 முதல் நவம்பர் 15 வரை 15 நாட்களுக்கு மகாராஷ்டிரா போலீஸ் மும்பை முழுவதும் 144 தடையை விதித்துள்ளது. இந்த உத்தரவின்படி, மும்பையில், 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஊர்வலங்கள் செல்லவும், பட்டாசுகள் வெடிக்கவும் போராட்டம், உண்ணாவிரதம் ஆகியவை நடத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமணங்களுக்கும், இறுதிச் சடங்குகளுக்கும் 144 தடை கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்