சென்னை மந்தைவெளி பகுதியில் மழை காரணமாக 40 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. நேற்றிரவு பெய்த மழையால், நார்ட்டான் தெருவில் உள்ள பழமையான மரம் விழுந்தது. இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லாத நிலையில், மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்பகுதியில் ஃபைபர் கேபிள், மின்சார கேபிள் சேதமடைந்துள்ளன.