தற்போதைய செய்திகள்

விருது வழங்கிய நித்தியானந்தா; நெகிழ்ந்து போன சூர்யா சிவா - வாங்கியது ஏன் என விளக்கம்

தந்தி டிவி

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யாவுக்கு, கைலாசா தர்மரட்சகர் விருது வழங்கி நித்தியானந்தா கெளரவித்துள்ளார். பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக செயல்படும் திருச்சி சூர்யா, தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். விஜயதசமி விழாவையொட்டி, திருச்சி சூர்யா சிவாவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்து மதத்தின் புகழை ஊடகங்களில் தொடந்து பரப்பி வருவதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக நித்தியானந்தா விளக்கம் அளித்துள்ளார். நித்தியானந்தா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு இதுவரை நிரூபிக்கப்படவில்லை என பாஜக பிரமுகர் திருச்சி சூர்யா சிவா தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் பெயர் கூறும் அளவு இருக்கும் ஒரே சாமியார் நித்யானந்தா என்றும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்