தற்போதைய செய்திகள்

குழந்தை பிறந்த அடுத்த நொடி நடந்த பயங்கரம் - அதிர்ச்சியில் உறைந்து போன உறவினர்கள்

தந்தி டிவி

நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழந்த நிலையில், மருத்துவர்களின் அலட்சியப் போக்கே காரணம் எனக்கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சொக்கட்டான் தோப்பு பகுதியை சேர்ந்த அலெக்ஸ் என்பவரின் மனைவி மகாராணி, இரண்டாவது பிரசவத்திற்காக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், மகாராணி எதிர்பாராத விதமாக திடீரென உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை டவுன் காவல் உதவி ஆணையர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மகாராணி இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்