தற்போதைய செய்திகள்

அறுந்து தொங்கிக் கிடந்த மின்கம்பியால் விபரீதம் - ஒரே நேரத்தில் தந்தை, மகன் பரிதாப பலி | Mamallapuram

தந்தி டிவி
• செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே, அறுந்து தொங்கிக் கிடந்த உயர் அழுத்த மின்கம்பி உரசியதில், மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. • மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டன். இவர் தனது 10 வயது மகன் ஹேமநாதனுடன் தண்ணீர் கேன் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்றுள்ளார். • அப்போது உயர்அழுத்த மின் கம்பி ஒன்று 4 அடி உயரத்தில் அறுந்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. • இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்கும்போது, கோதண்டன் மற்றும் அவரது மகன் ஹேமநாதன் மீது, மின் கம்பி உரசியதில், மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். • தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்