சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் செல்போன் செயலியில் கடன் வாங்கியுள்ளார். கிரெடிட் பீ (Kredit bee) என்ற கடன் செயலியில் 2 ஆயிரத்து 500 ரூபாய் கேட்ட அவர், கோரிக்கை முழுமை பெறாத நிலையில், கைவிட்டுள்ளார். எனினும் 2 நாள் கழித்து அவரது வங்கிக் கணக்குக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வந்துள்ளது. ஒருவாரத்துக்கு பின் அவரது செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், இந்தியில் ஆபாசமாக பேசியுள்ளார். இதனிடையே, ஆட்டோ ஓட்டுனரின் மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த அந்த செயலி கும்பல், பாலியல் தொழில் செய்பவர் என எழுதி, பலருக்கும் பரப்பி உள்ளனர். ஆட்டோ ஓட்டுனர் மகள்களான சிறுமிகளின் படத்தையும் சித்தரித்து அனுப்பியுள்ளனர்.