தற்போதைய செய்திகள்

மூன்று நாள் பரோலில் சென்ற ஆயுள் தண்டனை கைதி தலைமறைவு | சிசிடிவி காட்சியில் ஆதாரம்..?

தந்தி டிவி

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் கொலைவழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மூன்று நாள் பரோலில் சென்ற ஹரிகிருஷ்ணன், மீண்டும் சேலம் சிறைக்கு குறித்த நேரத்திற்கு வரவில்லை. பல்வேறு இடங்களில் சிறை வார்டன்கள் தேடியும் ஹரிகிருஷ்ணன் கிடைக்காததால் தனிப்படை அமைக்கப்பட்டது. சிறை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஹரிகிருஷ்ணன் சிறை முன்பாக காரில் வந்து இறங்குவது பதிவாகி இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, சிறை வார்டன் ராமகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி மாயம்.. நடுப்பட்டு கிராமத்தில் விசாரணை

Chennai | Rowdy Mu*der | சென்னையில் நடுரோட்டில் ரவுடியை வெ*டி விட்டு தவுலத்தாக சென்ற இளைஞர்கள்

New Rs 1,000 note | புதிய ரூ.1000 நோட்டு..? மத்திய அரசு அதிகாரபூர்வ விளக்கம்

Theni Prisoners Escape | சிறை கைதிகள் தப்பியோட்டம் - தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை

Theni Jail Break | காட்டுக்குள் ஓடிய கிரிமினல்கள்.. துண்டாக தூக்கி கதறவிட்ட Drone