தற்போதைய செய்திகள்

நண்பனின் மனைவியுடன் பழக்கம்.. எச்சரித்தும் கேட்காத இளைஞர் - இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டத்தில் பல முறை எச்சரித்தும் தன் மனைவியுடன் பழகி வந்த நண்பனை இளைஞர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்குன்றம் அடுத்த பெருமாள் அடிபாதம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரும் நரேஷ்குமாரும் நண்பர்களான நிலையில், நரேஷ்குமாரின் மனைவியுடன் வெங்கடேசன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த நரேஷ்குமார், பல முறை வெங்கடேசனை எச்சரித்த வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு நரேஷ்குமாரின் வீட்டருகே வெங்கடேசன் வந்ததால் இருவருக்குமான மோதல் முற்றியுள்ளது. இதில்,வெங்கடேசனை போன் மூலம் தனியே அழைத்த நரேஷ்குமார், தனது மைத்துனர்களுடன் சேர்ந்து அவரை சரமாரியாக வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நரேஷ்குமார் மற்றும் அவரது மைத்துனர்களான தினேஷ் மற்றும் லோகஷ் ஆகிய மூவரை கைது செய்த நிலையில், நீதிம புழல் சிறையில் அடைத்தனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக