• வேலூர் மாவட்டம் அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரேகா தலைமையிலான காவல் துறையினர் நேற்று இரவு மலைகோடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
• அப்போது இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர்.
• அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துவிட்டு தப்பிய அவர்களை காவல் துறையினர் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
• சோதனையில், கருவேப்பிலைகளுக்கு இடையில் சிலையை மறைத்து வைத்திருந்ததும், அது ஐம்பொன்னால் ஆன சிவகாமி அம்மையார் சிலை என்பதும் தெரிய வந்தது.
• சிலையை கடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வின்சென்ட் ராஜ், கண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.
• விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சிலையை கடத்தி வந்ததும், அதனை திருமலைக்கோடி பகுதியில் சுமார் ஒன்றரை கோடிக்கு விற்க பேரம் பேசியதும் தெரிய வந்தது.
• அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர்.