தற்போதைய செய்திகள்

ஸ்டீராய்டு ஊசி செலுத்தியதால் ஜிம் மாஸ்டர் ரத்த வாந்தி எடுத்து பலி - சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

ஆவடி அருகே அதிகப்படியான ஸ்டீராய்டு ஊசி செலுத்தியதால் ஜிம் டிரெய்னர் ஒருவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..

ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் சபரி முத்து என்கின்ற ஆகாஷ். 25 வயதான இவர், ஜிம் டிரெய்னராக பணிபுரிந்து வந்தார். மேலும் இவர் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இதனிடையே மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென கடந்த 22ஆம் தேதி ரத்த வாந்தி எடுத்துள்ளார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த சூழலில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 2 கிட்னிகளும் செயலிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆகாஷ் உயிரிழந்தார். ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்ததுடன் கட்டுடலுக்காக ஸ்டீராய்டு ஊசி அதிகம் செலுத்தியதே இவரின் மரணத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது..

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி