தற்போதைய செய்திகள்

திமுக கூட்டத்தில் பெண் காவலரிடம் சில்மிஷம் - தெரியாமல் கைபட்டதாக மன்னிப்பு கோரிய இளைஞர்கள்

தந்தி டிவி

சென்னையில் கனிமொழி பங்கேற்ற திமுக பொதுக்கூட்டத்தில், பெண் காவலரிடம் இரு

இளைஞர்கள் அத்துமீறிய விவகாரத்தில்,

தெரியாமல் கைபட்டு விட்டதாக மன்னிப்பு கோரியதால், பெண் காவலர் புகாரை வாபஸ் பெற்றார். விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த

பெண் காவலரிடம் இரு இளைஞர்கள், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அத்துமீறலில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் காவலரிடம் கோயம்பேடு துணை ஆணையர் குமார் விசாரணை நடத்தினார். விசாரணையில் குடிபோதையில் தெரியாமல் கைபட்டு விட்டதாக கூறி, பெண் காவலரிடம் மன்னிப்பு கோரினர்.

இதை ஏற்று பெண் காவலர் புகாரை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. 

#BREAKING || Cylinder Price Hike | விடிந்ததும் அதிர்ச்சி - சிலிண்டர் விலை அதிரடி உயர்வு

Breaking | CM Stalin | DMK | நேரில் சந்திக்கும் CM ஸ்டாலின்? | வெளியான முக்கிய தகவல்

Breaking | Congress | TN Election 2026 | நாளை சென்னை வரும் VIP | பரபரக்கும் காங்கிரஸ்

Breaking | TVK Vijay | காத்திருக்கும் சர்ப்ரைஸ்? | நாளை அறிவிக்கிறார் விஜய்

BREAKING || 2வது குழந்தை பெற்றால்... வெளியான ஜாக்பாட் அறிவிப்பு