தற்போதைய செய்திகள்

கடல் கடந்த காதல்... மலேசிய பெண்ணை கரம் பிடித்த தமிழன்... தமிழர் பாரம்பரிய முறைப்படி டும் டும்

தந்தி டிவி

மலேசியா பெண்ணிடம் காதல் வயப்பட்ட ராமநாதபுரம் இளைஞர், அவரை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துக்கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் சாத்தக் கோண்வலசை கிராமத்தை சேர்ந்த அருண் செல்வம் இரண்டு வருடத்திற்கு முன்பு மாலத்தீவில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அருண் செல்வத்திற்கும், அவர் பணிபுரியும் அதே ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்த மலேசியாவை சேர்ந்த யீஷ் யான் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் தமிழர் பாரம்பரியப்படி திருமணம் செய்துக்கொள்ள காதலி விரும்பிய நிலையில், அதற்கு மணமகன் வீட்டார் பச்சைக்கொடி காட்டியுள்ளனர். இதையடுத்து ராமநாதபுரத்தில் தனியார் மண்டபத்தில் இருவரது திருமணம் ஜோராக நடைபெற்றது. அப்போது, செண்டை மேளத்தை இசைத்து மணமகன் உற்சாகமடைந்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை