தற்போதைய செய்திகள்

ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு... கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த கொடூரம் - மதுரையில் அதிர்ச்சி

தந்தி டிவி

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் 19 வயது இளைஞர் வாசுதேவன். இவர் மேலூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்த நிலையில், கொடுக்கம்பட்டியில் நடந்த சிவராத்திருக்கு நண்பருடன் சென்றுள்ளார். அப்போது. அங்கு நடைபெற்ற கலை, நிகழ்ச்சியில் சில இளைஞர்களுக்கும், வாசுதேவன் நண்பர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், இருதரப்பினரும் போலீசில் புகாரளித்த நிலையில், வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று கல்லூரி முடிந்து இரு சக்கர வாகனத்தில் மதியம் வீடு திரும்பிய வாசுதேவனை, ஐந்து பேர் கொண்டல் கும்பல் மறித்து தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். உடனே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, ஆம்புலன்ஸை மறித்த இளைஞரின் உறவினர்கள் கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறித்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பானது. இதையடுத்து, 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார் ஐந்து இளைஞர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்