தற்போதைய செய்திகள்

திருவிழாவில் கிரேன் சாய்ந்து விபத்து... அலகு குத்திய பள்ளி மாணவன் உட்பட 3 பேர் பலி

தந்தி டிவி

அரக்கோணத்தை அடுத்த கீழ்வீதி கிராமத்தில் தைப் பொங்கலை யொட்டி, பணவட்டம்மன் கோயிலில் மயில் ஏரி திருவிழா நடைபெற்றது.

விழாவில், அலகு குத்தி, கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி சென்றனர்.

அப்போது, கிரேன் திடீரென கூட்டத்தில் இருந்தவர்கள் மீது சாய்ந்த‌து.

இதில், அலகு குத்தியிருந்த பள்ளி மாணவன் ஜோதி பாபு என்பவர் தூக்கி வீசப்பட்டார்.

அவர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

அத நேரத்தில், கூட்டத்தில் படுகாயமடைந்த 4 பேர், அரக்கோணம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் 2 பேர் உயிரிழந்தனர்.

திருவிழாவில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்த‌து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் காட்சி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Nellai Crime | தமிழகத்தை உலுக்கிய நெல்லை இரட்டைக் கொ*ல சம்பவம் | உயிர்தப்பிய சிறுவன் பகீர் தகவல்

Breaking | Ammonia Gas Leak | ``வெளியேறுங்கள்..'' | தடைசெய்யப்பட்ட பகுதி - வெளியான அறிவிப்பு

Gold Price | Silver | ஒரேநாளில் 2வது முறை... பெரும் இடியை இறக்கிய தங்கம் விலை

Ravi Mohan house theft | ரவி மோகன் வீட்டில் நடந்த திருட்டு.. வெளியான பரபரப்பு தகவல்

Breaking | Private College Fees | எந்தெந்த துணை மருத்துவ படிப்புகளுக்கு எவ்வளவு கட்டணம்?