தற்போதைய செய்திகள்

தந்தையை இழந்த தவித்த மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய தொண்டு நிறுவனம் - தந்தி டிவி செய்தி எதிரொலி

தந்தி டிவி

தந்தி டிவி செய்தி எதிரொலியாக, கடலூரில் தந்தையை இழந்த மாணவிக்கு தொண்டு நிறுவனம் ஒன்று உதவிக்கரம் நீட்டியுள்ளது.

கடலூர் வண்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிரிஜா. இவர், 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய போது, அவரது தந்தை ஞானவேல் திடீரென உயிரிழந்துவிட்டார். தந்தை இழந்த சோகத்திலும் கிரிஜா தேர்வு எழுதிய நிலையிலும், 12-ம் வகுப்பு தேர்வில் 479 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். அவர் தேர்வு எழுதிய போது நடந்த சம்பவமும், தேர்வு முடிவு வந்த‌தும் அவர் பெற்ற மதிப்பெண் குறித்த விபரங்களும் தந்தி டிவியில் ஒளிபரப்பானது. இதைப்பார்த்த 'நாங்களும் இருக்கின்றோம்' என்ற திருப்பூரைச் சேர்ந்த அமைப்பு, மாணவிக்கு உதவுவதாக உறுதியளித்திருந்த‌து. அதன்படி, கிரிஜாவின் வீட்டுக்கு சென்ற தொண்டு நிறுவனத்தினர், மாணவியின் மதிப்பெண் சான்றிதழின் நகல், வங்கிப் புத்தக நகலைப் பெற்றுக் கொண்டு, கல்வி உதவிச் செலவு முழுவதையும் ஏற்பதாக தெரிவித்தனர். மேலும், மாணவிக்கு தேவையான உடையும் வாங்கிக் கொடுத்துள்ளனர். தந்தையை இழந்த மாணவிக்கு, தந்தி டிவி செய்தி எதிரொலியாக தன்னார்வலர்கள் தந்தையாக மாறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்