தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.04.2026) | 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.04.2026)

thanthitv

திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்...

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பீர்களா என்று முதல்வர் கேள்வி எழுப்பியதும், செய்வோம் என்று தொண்டர்கள் முழக்கமிட்டனர்....

திமுக-வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள இல்லத்தரசிகள் திட்டம், சூப்பர் டூப்பர் வாக்குறுதி என்று முதலமைச்சர் கூறினார்...

தமிழ்நாடு முழுக்க இல்லத்தரசி திட்டம் குறித்து தான் பேச்சாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.....

என்.டி.ஏ. கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்றால், சிறிய கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுவது ஏன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்........

அதிமுகவிடம் ஆட்சியை வழங்கினால், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் டெல்லியிடம் அடமானம் வைத்து விடுவார்கள் என்றும் அவர் கூறினார்...

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக 4 தொகுதிகளிலுமே உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது......

சீர்காழியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அங்கும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்...

தமிழக சட்டமன்ற தேர்தலில், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, தேர்தல் ஆணையத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க, சாய்தள வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது...

Vijay | TVK | Police | திடீர் மாற்றம்.. விஜய்க்கு எதிர்பாரா மெசேஜ்-பின்னணி என்ன..?

Petrol Diesel Price | Shell | அடுத்த ஷாக்.. ஒரேஅடியாக ரூ25 எகிறியது.. டீசல்/பெட்ரோல் விலை

BREAKING || "பெட்ரோல், டீசல்..." - மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

Manickam Tagore | Congress | மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. காங்.,ல் உச்சகட்ட பரபரப்பு

High Court | ECI | Election | "வாக்காளர்களுக்கு பணம்.." ஹைகோர்ட் போட்ட உத்தரவு