தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28.02.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள்

thanthitv
  • இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை தமிழகம் வருகிறார்......மதுரையில் நாளை பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர், என்.டி.ஏ. கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்ற உள்ளார்...

  • சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் பிரதிநிதிகளுடன், திமுக குழு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.....அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு உள்ளிட்ட விவகாரம் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இன்றைய பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

  • அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் அக்கட்சியில் இணைய முயன்று வந்த, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திடீர் திருப்பமாக, தமது மகன் மற்றும் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்...சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைப்பு படிவத்தில் கையெழுத்திட்டு தம்மை திமுக-வில் இணைத்துக்கொண்டார்...

  • மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி, தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்...வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க, மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என, அவர் வலியுறுத்தி இருக்கிறார்...

  • சட்டமன்ற தேர்தலை ஒட்டி 234 தொகுதிகளிலும் நாளை தவெக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது...தேர்தல் பரப்புரைப் பணிகள் குறித்து கலந்தாலோசிக்கும் கூட்டத்தில், அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் பங்கேற்க கட்சித் தலைமை அறிவுறுத்தி உள்ளது...

  • தவெக தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் அவரது மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார்...விஜய் - சங்கீதா இருவரும் 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது தவெக தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....

Breaking | Vijay | Sangeetha | கேஸ் போட்ட மனைவி | விஜய்க்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

Breaking | Arvind Kejriwal | விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால் | அதிரடியில் இறங்கிய சிபிஐ

Breaking | Vijay | "நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.."விவாகரத்து மனுவில் ஷாக் மேல் ஷாக்

🔴LIVE : முதல்வர் ஸ்டாலின் பேச்சு | நேரலை காட்சிகள் | CM Stalin | MK Stalin | Speech | DMK

BREAKING | Sangeetha | Vijay | சங்கீதா விவாகரத்து மனுவில் விஜய் குறித்து பகீர் தகவல்