முக்கிய செய்திகள்

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்.. அரையிறுதியில் இந்தியா-ஆஸி.மோதல்.. பழைய தோல்வி - பதிலடி கொடுக்குமா இந்தியா?

தந்தி டிவி
• தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளது. • கேப்டவுனில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. கடந்த மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது. • இந்த தோல்விக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தற்போது பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. • மெக் லேனிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காமல் வலிமையாக விளங்கும் நிலையில், கடுமையாகப் போராடினால் மட்டுமே இந்தியாவின் இறுதிப்போட்டிக் கனவு நனவாகும். • இதனிடையே, வருகிற 24ம் தேதி நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை தென் ஆப்பிரிக்கா எதிர்கொள்ள உள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு