சினிமா

Actor Mohanlal | நடிகர் மோகன்லால் எடுத்த திடீர் முடிவு

நடிகர் மோகன்லால் எடுத்த திடீர் முடிவு

thanthitv

Actor Mohanlal | நடிகர் மோகன்லால் எடுத்த திடீர் முடிவு

#ActorMohanlal #elephant #tusk #thanthitv

யானை தந்தங்களை ஒப்படைக்க நடிகர் மோகன்லால் விண்ணப்பம் மலையாள நடிகர் மோகன்லால் தன் வசமுள்ள யானைத் தந்தங்கள் மற்றும் அவற்றால் செய்யப்பட்ட கலைப் பொருட்களை வனத்துறையிடம் ஒப்படைக்க விண்ணப்பித்துள்ளார். கேரள வனத்துறையின் ஒருமுறை மன்னிப்புத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் மாவட்ட வன அலுவலரிடம் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில், அவரிடமுள்ள இரண்டு ஜோடி யானைத் தந்தங்கள் மற்றும் 13 கைவினைப் பொருட்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர். 2011-ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனையில் இந்த யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக நீடித்து வந்த வழக்கின் பின்னணியில் தற்போது அவற்றை முறையாக ஒப்படைக்கும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

Ammonia Gas Leak | தமிழகத்தை உலுக்கிய கோர சம்பவம் | 2வது நாளாக விஷவாயுவை அகற்றும் பணி

BREAKING || காலையே அதிர்ச்சி செய்தி...வேலைக்கு சென்ற போது நடந்த பயங்கரம்- துடிதுடித்து பலியான 4 பேர்

Train | Chennai | "ரத்து.." - சென்னை ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Suryavanshi | சச்சின் சாதனையை முறியடித்து `சரித்திரம்’ படைத்த சூர்யவன்ஷி

TVK Vaigaichelvan | ``CM விஜய் இன்னும் கால் நூற்றாண்டுக்கு தேவை..'' | வைகைச் செல்வன் நெகிழ்ச்சி