Musuem Heist | 7 நிமிடங்களில் பல 100கோடிகளை சுருட்டிய கும்பல் | நெப்போலியனை குறிவைத்து ஹைடெக் கொள்ளை
ஹாலிவுட் படத்தை மிஞ்சும் கிரைம் - மாவீரன் நெப்போலியன் நகைகள் கொள்ளை
உலக வரலாற்றுல மாவீரன் என்ற அடைமொழி ஓடு இன்றும் அழைக்கப்படுபவர் நெப்போலியன். பிரான்ஸ்-ஐ ஆட்சி செய்த மன்னர் நெப்போலியன் காலத்து நகைகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ்-ல இருக்ககூடிய பிரபலமான லூவர் அருங்காட்சியகத்துல பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருது. உலக அளவுல ரொம்பவே புகழ்பெற்ற அருங்காட்சியகம் இது. ஒரு நாளுக்கு சராசரியா 30 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் உலகின் பல நாடுகளில் இருந்தும் வந்து போறாங்க. உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியம் இந்த அருங்காட்சியத்துல தான் இருக்குது. போன வருஷம் 2024-ல மட்டும் 87 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுருக்காங்க. உலகிலேயே அதிக மக்களால் பார்வையிடப்பட்ட
அருங்காட்சியகம் இதுதான்.
1793-ல தொடங்கப்பட்ட இந்த லூவர் அருங்காட்சியகத்துல பழங்காலப் பொருட்கள், சிற்பங்கள், ஓவியங்கள்னு சுமார் 33 ஆயிரம் கலைப்பொருட்கள் பத்திரமா பாதுகாக்கப்பட்டு வருது. மன்னர் நெப்போலியன் காலத்து நகைகள், அரசிகளின் கிரீடங்கள்னு விலைமதிப்பு மிக்க ஆயிரக்கணக்கான தங்க, வைர ஆபரணங்கள் இங்க பாதுகாக்கப்பட்டு வருது.