இந்தியாவை மீண்டும் சீண்டிய டிரம்ப் - ``மவுனம் காக்கும் மோடி’’.. தாக்கும் எதிர்க்கட்சிகள்
இந்தியாவிடம் மீண்டும் மீண்டும் வம்பிழுக்கும் டிரம்ப்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை அமெரிக்கா தான் நிறுத்தியதாக மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது... "இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும், மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும் ருவாண்டாவிற்கும் இடையிலான போர்களை நாங்கள் தான் நிறுத்தினோம்“ என வெள்ளை மாளிகையில் டிரம்ப் தெரிவித்துள்ளார்... டிரம்ப் இதற்கு முன்பும் இந்தியா பாகிஸ்தான் போர் குறித்து பலமுறை இதேபோல் கூறிய நிலையில், அதை இந்தியா தொடர்ந்து மறுத்துள்ளது. கடைசி தாக்குதலில் மட்டும் 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், தான் அவர்களை அழைத்து தாக்குதலை தொடர்ந்தால் வர்த்தகம் கிடையாது என மிரட்டியதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் கூற்றுக்கு தொடர்ந்து பிரதமர் மோடி மௌனம் காப்பதை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.