Trump | India US Relations | பரபரப்பான சூழலில் இந்தியாவுக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு
இந்தியா மீதான வரி விதிப்பு குறைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்து பேசிய அவர், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதால், இந்தியாவுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது என்றார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக் கொண்டதால், அந்நாட்டின் மீதான வரி குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.