Trump | America | Afghan | "இது போர் தான்.." டிரம்ப் அறிவிப்பால் பதற்றத்தில் ஆசியா

Update: 2025-11-27 11:16 GMT

வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தை போர் தாக்குதலாகவே கருதுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஃபுளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்,

ஆப்கானிஸ்தானை சேர்ந்த நபர் இந்தக் கொடூர தாக்குதலை அரங்கேற்றியதாகவும்,

இது ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும், மனிதகுலத்துக்கும் எதிரான குற்றச்செயல் என்றும் ஆவேசமாக பேசினார்.

இதனிடையே, வாஷிங்டனில் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ரஹ்மானுல்லா லாகன்வால் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்