ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேசிய திருவிழா - களைகட்டிய போட்டி.. செம VIBE

Update: 2025-07-20 06:57 GMT

மங்கோலிய கலாச்சாரத்தை பறைசாற்றும் தேசிய திருவிழா

கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள மங்கோலியாவில் தேசிய திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

மங்கோலியாவின் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக, மல்யுத்தம், குதிரைப்பந்தயம் மற்றும் வில்வித்தை போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை மையமாகக் கொண்டு ஆண்டுதோறும் நாடம் திருவிழா Naadam Festival நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு கோடை மழைக்கு இடையே நடைபெற்ற இத்திருவிழாவில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.இந்த விழாவை சுமார் 1 லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்