ஜெருசலேமில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எரிசக்தி, பாதுகாப்பு, பொருளாதாரம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோலிட்ஸ் (Nikos Christodoulides), கிரேக்க அதிபர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் (Kyriakos Mitsotakis) ஆகியோர் கூட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளவும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படவும் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.