ஆப்கானிஸ்தானில் சாலை விபத்தில் பேருந்து தீ பிடித்து எரிந்ததில், 17 சிறுவர்கள் உட்பட 79 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈரானில் இருந்து காபுல் நோக்கி புலம்பெயர் மக்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஒன்று, மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெரத் மாகாணம் அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிள் மற்றும் டிரக் மீது பேருந்து மோதி தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், பேருந்து முழுவதுமாக எரிந்ததில், அதில் பயணித்த 17 சிறுவர்கள் உட்பட 79 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்