விமர்சனத்திற்கு உள்ளான நடிகையை பாராட்டிய டிரம்ப்
விளம்பர சர்ச்சையில் சிக்கிய நடிகை சிட்னி ஸ்வீனியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார்.
நடிகை சிட்னி ஸ்வீனிக்கு சிறந்த ஜீன்ஸ் உள்ளது என்ற வாசகத்துடன் கடந்த வாரம் வெளியான விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகை சிட்னி ஸ்வீனியின் Sydney Sweeney விளம்பரத்தை விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நடிகை சிட்னி ஸ்வீனி பதிவு செய்யப்பட்ட குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதால், அதுபற்றி கருத்து தெரிவிக்குமாறு செய்தியாளர்கள் டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, சிட்னி ஸ்வீனி குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என்றால் அவரது விளம்பரம் அருமையாக இருக்கும் என்று நினைப்பதாக டிரம்ப் பதிலளித்தார்.
வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் கரோலின் லீவிட்டை Karoline Leavitt அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்ணித்த நிலையில், நடிகையின் சர்ச்சைக்குரிய விளம்பரத்தை விரும்புவதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.