North America Cyclone | புரட்டி போட்ட ஆக்ரோஷ புயல்-சில்லு சில்லாய் சிதறிய சாலை.. தலைகீழான கோர காட்சி

Update: 2025-09-05 09:30 GMT

புரட்டி போட்ட ஆக்ரோஷ புயல்-சில்லு சில்லாய் சிதறிய சாலை.. தலைகீழான கோர காட்சி

மெக்சிகோவை புரட்டி போட்ட புயல்- சாலை துண்டிப்பு

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் புயலுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் சேறும் சகதியுமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் கடும் சேதமடைந்தன. புயலின் கண் பகுதி மெக்சிகோவின் லாஸ் கோபாஸ் நகரில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் கரையைக் கடந்ததால், இங்கு பாதிப்பு மிகவும் தீவிரமாக உணரப்பட்டது. புயலின் தாக்கம் தற்போது குறைந்த நிலையில், பஜா கலிஃபோர்னியா சுர் பகுதியில் சனிக்கிழமை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்