வடகொரியாவில் மத்திய மற்றும் வடக்கு மாகாணங்கள், பியாங்யாங் உள்ளிட்ட நகரங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்யும் என வடகொரிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையில் இருந்து மூன்றாவது நாளாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தலைநகர் பியாங்யாங்கில், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரை, 3 மணி நேரத்தில் 14 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.