"டிரம்பை காட்டிலும் பூரி ஜெகன்நாதரே முக்கியம்" - ஒடிசாவில் மோடி உரை

Update: 2025-06-21 02:42 GMT

"டிரம்பை காட்டிலும் பூரி ஜெகன்நாதரே முக்கியம்" - மோடி

அமெரிக்காவுக்கு வருவதை காட்டிலும் பூரி ஜெகன்நாதரின் மண்ணுக்கு செல்வதே முக்கியம் என்று டிரம்பின் அழைப்பை நிராகரித்த‌தாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவில் 18 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான 105 நலத்திட்டங்களை தொடங்க வைத்து, பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றிருந்தபோது, அமெரிக்க அதிபர் டிரம்ப் விருந்துக்கு வருமாறு வாஷிங்டன் டி.சி.க்கு வருமாறு அழைப்பு விடுத்த‌தாக குறிப்பிட்டார். ஆனால், வாஷிங்டன் டி.சி.க்கு செல்வதை காட்டுலும், பூரி ஜெகன்நாதரின் மண்ணில் கால்தடம் பதிப்பதே முக்கியம் என்பதால், டிரம்பின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்தார். முன்னதாக, புவனேஷ்வர் வந்த பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்