Israel Iran War | Ali Khamenei | கமேனி எடுத்த முடிவு

Update: 2025-06-23 08:46 GMT

இஸ்ரேல் மீதான தண்டனை தொடரும் என, ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி Ayatollah Ali Khamenei எச்சரிக்கை விடுத்துள்ளார். தண்டனை தொடர்வதாகவும் அவரது சமூக ஊடகக் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இதனிடையே, அமெரிக்க தாக்குதல்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும், நேரம், தன்மை மற்றும்​ அளவை ஈரானே முடிவு செய்யும் என்றும் ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் இரவானி Iravani தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்வதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் வகையில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்