லண்டனில் ஜெய்சங்கரை தாக்க முயற்சி.. காருக்கு முன் பாய்ந்த காலிஸ்தானி ஆதரவாளர் -பரபரப்பு காட்சி

Update: 2025-03-06 13:50 GMT

லண்டனில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சாத்தம் ஹவுசில் (Chatham House) பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமியை (David Lammy) சந்தித்து, வர்த்தகம் உட்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விவாதித்தார். சந்திப்பை முடித்துவிட்டு ஜெய்சங்கர் வெளியே வந்தபோது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் காரில் ஏற முயன்றபோது, பாதுகாப்பு காவலர்களை மீறி, கார் முன்பு வந்த காலிஸ்தான் ஆதரவாளர் தாக்க முயன்றார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்