Israel | Netanyahu| ஆள் யார் என தெரியாமல் உச்ச அமைப்பு மீதே கைவைத்த இஸ்ரேல் - உலகில் திடீர் பதற்றம்
ஐ.நா. அமைதிப் படை மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. இஸ்ரேலுக்கும் அதன் அண்டை நாடான லெபனானுக்கும் இடையே ஓராண்டு காலமாக போர் நீடிக்கிறது. இதில் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைதிப் படை ஒன்றை ஐ.நா. அனுப்பிவைத்தது. இந்நிலையில், அந்த அமைதிப் படை மீதே இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக அமைதிப் படையினர் காயமின்றி தப்பினர். இதனிடையே மோசமான வானிலை காரணமாக அமைதிப் படையினரின் அடையாளம் தெரியாததால், கிளர்ச்சியாளர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்தது.