காசாவில் இரண்டாவது நாளாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் நாட்டின் சார்பில் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் வான்வழியாக வீசப்பட்டன. அதனைப் பெற மக்கள் முண்டியடித்துக் கொண்டு பரிதவித்த நிலையில், உதவி பொருட்கள் கிடைக்காததால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த நிலையில், காசா சிட்டி உள்ளிட்ட மக்கள் அதிகம் வசிக்கும் மூன்று பகுதிகளில் தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது.