சீனாவின் ஆதிக்கம்.. ஆபத்து... "இந்தியாவிற்கு இது நல்லதல்ல.." - பொருளாதார ஆலோசகர் எச்சரிக்கை
உயர் தொழில்நுட்பம் மற்றும் நடுத்தர தொழில்நுட்ப தொழில்களில் சீனாவின் ஆதிக்கம் குறித்து தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் எச்சரித்துள்ளார். 2024-25 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது உட்கட்டமைப்பை பொறுத்தவரை இந்தியா சிறப்பாக செயல்படுவதாக அவர் தெரிவித்தார். ஜிடிபி வளர்ச்சியின் அடிப்படையில் விவசாயம் நமது எதிர்காலத்துறை என்றும் அவர் கூறினார்.