``நான் இப்படியும் செய்யலாம்.. அப்படியும் இறங்கலாம்'' `உக்கிர போர்’.. உழட்டிய ட்ரம்ப்

Update: 2025-06-19 02:39 GMT

ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது அதுவே எங்கள் விருப்பம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத் தளபதியுடனான சந்திப்புக்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம், இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நீண்டகால யுத்தத்தை நாங்கள் விரும்பவில்லை என்று கூறினார். ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் நான் இணையலாம், இணையாமல் இருக்கலாம், நான் என்ன செய்யப்போகிறேன் என்று யாருக்கும் தெரியாது என்று கூறிய டிரம்ப், அணு ஆயுதங்களை ஈரான் வைத்திருப்பதை நாங்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்