மலேசியாவுக்கு பறந்த 52 அரசு பள்ளி மாணவர்கள் | Malaysia

Update: 2025-02-24 08:47 GMT

மலேசியாவுக்கு பறந்த 52 அரசு பள்ளி மாணவர்கள்

திருவாரூர், தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 52 அரசு பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலாவிற்காக மலேசியா கிளம்பிச் சென்றனர். நூல் வாசிப்பு, நுண்கலைகள் , விளையாட்டு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் அரசு பள்ளி மாணவர்கள் போட்டி தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உலக நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அனுப்பப்பட்டு வருகின்றனர். அதன் படி, திருவாரூர் தஞ்சாவூர் சேலம் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 52 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாக கிளம்பிச் சென்றனர். இக்குழுவில் அரசு பள்ளி அதிகாரிகளும் இடம்பெற்றுள்ள நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷூம் மாணவர்களுக்கு சுற்றுலா தளங்களை காண்பிக்க உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்