இங்கிலாந்துக்கு படகில் புலம்பெயர்ந்து சென்ற பிரான்ஸ் மக்கள் - போட்டி போட்டு ஏறிய பரிதாப காட்சி

Update: 2025-07-03 05:04 GMT

பிரான்சில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள், இங்கிலாந்துக்கு படகு மூலம் புலம் பெயர்ந்து சென்றனர். கிரேவ்லைன்ஸ் (Gravelines) கடற்கரையில் குவிந்த பிரான்ஸ் மக்கள், அங்கு காத்திருந்த 2 ரப்பர் படகுகளில் போட்டிப்போட்டு ஏறினர். சிலர் படகில் ஏற இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். இரண்டு படகுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆங்கில கால்வாயை கடந்து இங்கிலாந்தை நோக்கி சென்றனர். படகில் இடம் கிடைக்காதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கடந்த திங்கட்கிழமை மட்டும் 879 பேர் பிரான்சில் இருந்து வந்துள்ளதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்