Eathquake | மெக்சிகோவில் திடீரென விடாமல் கேட்ட சைரன் சத்தம்.. அலறி அடித்து வீதிக்கு ஓடிவந்த மக்கள்
மெக்சிகோவில் 6.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
மெக்சிகோவின் குவெரேரோ (Guerrero) மாகாணத்தில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால்,
தலைநகர் மெக்சிகோ சிட்டி முழுவதும் நிலநடுக்க எச்சரிக்கை அலாரங்கள் ஒலித்தன. இதனால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. 35 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மெக்சிகோ சிட்டி மற்றும் அண்டை மாகாணங்களில் வலுவாக உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.