அடுத்தடுத்து குலுங்கிய பூமி | தரைமட்டமான வீடுகள் | உயரும் உயிரிழப்புகள்
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் - உயிரிழப்பு 1,411ஆக அதிகரிப்பு
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 411ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நங்கர்கார், குனார், லக்மான் மாகாணங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. குனார் மாகாணத்தில் நுர்கல், சுகி, உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாயின. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை ஆயிரத்து 411 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.