2 நாளில் பதவியேற்பு.. சட்டென சீன அதிபருக்கு போன் அடித்த டிரம்ப் - பேசியது என்ன?
பதவியேற்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கமான 'Truth Social'-ல் டிரம்ப் பதிவிட்டுள்ளார். அதில் அமைதியான மற்றும் பாதுகாப்பான உலகம் அமைய சீன அதிபருடன் இணைந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இந்த கலந்துரையாடலின் போது டிக் டாக் குறித்தும் இரு தலைவர்கள் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.