China | சீன ஏர்போர்ட்டில் இந்தியருக்கு நேர்ந்த நிலை; மீண்டும் வெடித்த எல்லை சர்ச்சை..

Update: 2025-11-26 09:17 GMT

அருணாசலப்பிரதேசம் குறித்த சீனாவின் கருத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.சீன விமான நிலையத்தில் அருணாசலப்பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்த விவகாரம் சீன அதிகாரிகளிடம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்றும், இது ஒரு வெளிப்படையான உண்மை என்றும் தெரிவித்தார். இதனை சீன தரப்பு எவ்வளவு மறுத்தாலும், மறுக்க முடியாத இந்த யதார்த்தம் மாறப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்