அமலானது போர் நிறுத்தம் - காலரை தூக்கி விட்ட டிரம்ப்

Update: 2025-07-29 07:43 GMT

கம்போடியா, தாய்லாந்து போர் நிறுத்தத்திற்கு காரணம் நான்தான் என டிரம்ப் பெருமிதம்

தாம் எச்சரித்த பிறகே, தாய்லாந்தும், கம்போடியாவும் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தன என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த சண்டையை தான்தான் நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், கம்போடியா, தாய்லாந்து இடையே 5 நாட்களாக மோதல் நீடித்து வந்த நிலையில், வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறாது என்று தாம் எச்சரித்த பிறகே இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தன என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்