கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்குத் தொடர்பில்லை என கனடா நாட்டு விசாரணை ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2023ல் நிகழ்த்தப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலைக்கும் இந்தியாவுக்கும் தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ட்ரூடோ குற்றம் சாட்டி இருந்தார். இதை இந்தியா மறுத்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு விரிசல் அடைந்தது. இவ்விவகாரம் தொடர்பாக கனடா விசாரணை ஆணையம் விசாரித்து வந்த நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையில் வெளிநாட்டு சக்திகளுக்குத் தொடர்பில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.