இந்தியா, அமெரிக்கா உறவு குறித்து வெளியான தகவல்கள் - வெளியுறவுத்துறை மறுப்பு
வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட அமெரிக்க பொருட்களின் பட்டியலை இந்தியா மறுபரீசலினை செய்து வருவதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியா அமெரிக்காவுடனான தனது இருதரப்பு ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்து வருவதாகவும், அமெரிக்கா தனது விரோதமான பொருளாதாரக் கொள்கையை தொடர்ந்தால் அதனை நிறுத்தி வைக்க பரிந்துரை செய்து வருவதாகவும் வெளியாகியிருக்கும் தகவல்களை வெளியுறவுத்துறைக்கான உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு நிராகரித்துள்ளது.