நேபாளம் மற்றும் சீன எல்லையில் பெய்த கனமழை காரணமாக, போடே கோஷி Bhote Koshi ஆற்று வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். சீனா-நேபாளத்தை இணைக்கும் நட்புப் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த வெள்ளத்தில் சீனாவை சேர்ந்த 6 பணியாளர்கள் உட்பட 19 பேர் மாயமானதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.