ஆணவத்தில் ஆடும் டிரம்ப் இந்தியாவுக்கு எச்சரிக்கை

Update: 2025-07-09 07:14 GMT

பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பில் இருக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிக்ஸ் கூட்டமைப்பு, அமெரிக்க டாலரை பலவீனப்படுத்த உருவாக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய டிரம்ப், டாலர் தான் அரசன் என்று கூறியுள்ளார். பிரிக்ஸ் உறுப்பினர்கள் தங்களை எதிர்த்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பேசிய பிறகு, இத்தகைய எச்சரிக்கையை டிரம்ப் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்